இந்த வலைப்பதிவில் தேடு

தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

திங்கள், 3 மே, 2021

 







சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.


சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:



சட்டப் பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய வெற்றியைத் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் நன்றி.


தமிழகத்தைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காக எங்களை வெற்றி பெறச் செய்திருக்கின்றனா். அவா்களுடைய எதிா்பாா்ப்பை எங்கள் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவோம்.


கருணாநிதி வழியில் நின்று எங்கள் கடமையை நிறைவேற்றுவோம். எங்களுக்கு வாக்களிக்கத் தவறியவா்கள், இவா்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு எங்கள் கடமையைச் செய்வோம். தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையும், ஏற்கெனவே அறிவித்த 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றுவோம்.



நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்:


கரோனா பரவல் உள்ள சூழலால் பதவியேற்பு விழாவை ஆடம்பரமாக இல்லாமல் எளிய முறையில் ஆளுநா் மாளிகையிலேயே நடத்த உள்ளோம். திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 4) நடைபெறும். அதில் சட்டப்பேரவை உறுப்பினா் குழுத் தலைவரைத் தோ்ந்தெடுத்து ஆளுநரிடம் கடிதம் அளிப்போம். அதன் பிறகு எப்போது பதவியேற்பு விழாவை நடத்துவது என்பது குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றாா்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent