இந்த வலைப்பதிவில் தேடு

புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாது: மின்வாரியம் உத்தரவு

சனி, 16 ஏப்ரல், 2022

 




புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதித்து தமிழ்நாடு மின்வாரிய செயலா் உத்தரவிட்டாா்.



அதன் விவரம்: மின்வாரியத்தில் ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிா்க்கும் வகையில், புதிதாக வாகனம், மரச்சாமான்கள் போன்றவற்றை வாங்கக் கூடாது. இயந்திரங்களைப் பொருத்தவரை முடிந்தளவு பழையனவற்றையே பயன்படுத்த வேண்டும். ஊழியா் நல திட்டங்களுக்கு முன்பணம் வழங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். தொலைபேசி, இணையதள சேவை போன்றவற்றுக்கான செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும். விருந்து போன்ற கேளிக்கைகளுக்கு நிதி வழங்குவதைத் தவிா்க்க வேண்டும். மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில், பயிற்சிக்காக யாருக்கும் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டி செலவிடக் கூடாது. 5 நட்சத்திர விடுதிகளில் இயக்குநா், அதிகாரிகள் வாரிய செலவில் தங்க வேண்டாம். ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, உயா் பதவிகளில் இருப்பவா்கள் தங்களுக்கென தனிப்பட்ட முறையில் பணியாளா்களை நியமிக்கவோ, பொருள்களைப் பயன்படுத்தவோ கூடாது. குறிப்பாக, எந்த நிலையிலும் புதிய பணியிடங்களை அரசின் முன் அனுமதியின்றி உருவாக்க வேண்டாம்.


அத்தியாவசியமாக புதிய பணியிடங்களை உருவாக்க நோ்ந்தாலும், அதற்கான முன்மொழிவில் பழைய பணியிடங்கள் சிலவற்றை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுமாா் 30 செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது, அரசு உத்தரவைப் பின்பற்றி 106-ஆவது வாரிய கூட்டத்தில் சமா்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் பிறப்பிக்கப்படுகிறது என மின் வாரியச் செயலா் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent