இந்த வலைப்பதிவில் தேடு

பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் அரசு பள்ளி மாணவி துண்டு பிரசுரம்

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

 




பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்



கோடையின் தாக்கத்தில் இருந்து பறவைகளை காப்பாற்ற மண் பாண்டங்களில் தண்ணீர் வையுங்கள் என, மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்து வருகிறார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் நர்கீஸ் பாத்திமா, 18. கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2, படித்து வருகிறார். பேச்சு மற்றும் செவி திறன் குறைபாடு உள்ள மாணவி.கோடையின் தாக்கத்தில் இருந்து பறவைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், கும்மிடிப்பூண்டி பகுதியில், வீடு வீடாக சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவி துண்டு பிரசுரம்



அவரிடம் உள்ள குறைபாடு காரணமாக, பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி தான் தெரிவிக்க விரும்பும் கருத்துகளை துண்டு பிரசுரம் மூலமாக மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.அந்த துண்டு பிரசுரத்தில், கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால், பறவைகள் அதிக அளவில் உயிரிழக்க நேரிடும். அதனால் வீடுகளில், தண்ணீர் வையுங்கள். மண் பாண்டங்களில் தண்ணீர் வைத்தால் வெகு நேரம் குளிர்ச்சியாக இருக்கும். பறவைகளும் அதில் உடல் சூட்டை தணித்துக் கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.கோடையில் பறவைகளை காப்பாற்ற எண்ணி, சமூக ஊடக பதிவோடு நின்று விடாமல், களம் இறங்கிய மாற்றுத்திறனாளி மாணவியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent