இந்த வலைப்பதிவில் தேடு

1.20 லட்சம் ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி - ஆசிரியர் சங்கங்கள்

வியாழன், 30 ஜூன், 2022

 


''ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1.20 லட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் அரசின் உத்தரவு பாதிப்பை தரும்'' என, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக உயர், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் 5000 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு நிதிச் சுமை இல்லை. ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 1.20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கின்றனர். 


இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர்கள் 13 ஆயிரத்து331 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, 'ஆட்சிக்கு வந்தால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரை நியமிப்போம்' என்றார். ஆனால் அதை செயல் படுத்தவில்லை.எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.



தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தமிழக அரசின் மதிப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமனம் புதிய கல்வி கொள்கையை வரவேற்பது போல் உள்ளது.2013ம் ஆண்டுக்குப் பின் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடக்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர் களை மதிப்பூதியத்தில் நியமிக்கும் உத்தரவை கண்டிக்கிறோம். தமிழக அரசு தகுதி வாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்றார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent