இந்த வலைப்பதிவில் தேடு

10-ம் வகுப்பு தேர்ச்சி - முதலிடம், கடைசி இடம் எந்த மாவட்டத்திற்கு?

திங்கள், 20 ஜூன், 2022

 


10ம் வகுப்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடமும், 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடமும், 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 



தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் தேர்ச்சி பெற்றனர். 


சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 242 பேரில், 133 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தவர்களில் 42,519 பேர் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த எண்ணிக்கை, கடந்த 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் ஆகும். 2019-ம் ஆண்டில் 20,053 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று குறிப்பிடத்தக்கது. 


10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 


கணிதப் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 


10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 



கணிதப் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 12,714 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 90.37 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 79.33 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 4,006 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 886 ஆகும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்து உள்ளது.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent