இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களின் தனித் திறன் ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை செயலாளர்

வியாழன், 9 ஜூன், 2022

 





பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் பள்ளிப் பாடங்களை தவிர்த்து சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். 



நீலகிரி மாவட்டத்தி்ல் 5 நாட்கள் கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு முடித்த மாணவர்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி வினாப் போட்டிகளில் சிறந்து விளங்கிய 1250 மாணவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 


பயிற்சின்போது,  மாணவர்களுக்கு உடற்பயிற்சி, செய்தித்தாள் மற்றும் இளைஞர்கள் வாசித்தல், உடல் மொழி சார்ந்த பயிற்சி அளித்தல், மேடைப் பேச்சு, தமிழ்த் திறன்களை வளர்க்கும் வகையில் கருத்துப் பரிமாற்றம் சார்ந்த பயிற்சி, வானியல் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு ரூ.72 லட்சத்து 18 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent