இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 17.06.2022

வெள்ளி, 17 ஜூன், 2022

 



திருக்குறள் :


பால்:பொருட்பால்

இயல்:நட்பியல்

அதிகாரம்: மருந்து


குறள் : 949


உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.


பொருள்:

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்


பழமொழி :

Never cast the oar till you are out


கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே. 



இரண்டொழுக்க பண்புகள் :


1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.


2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.


பொன்மொழி :

அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்! - லெனின்


பொது அறிவு :


1.சர்வதேச யோகா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜுன் 21. 


 2. உலக சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

 செப்டம்பர் 27.


English words & meanings :

Eaglet - baby Eagle. Noun. கழுகுக்குஞ்சு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :



வெற்றிலை எடையைக் குறைக்கும், குரல் வளம் உண்டாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். 


NMMS q - 5


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 5,9,17,29,45, ? 


 விடை: 65    


நீதிக்கதை


நாயின் தந்திரம்


ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. 


அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. 


புலி அருகில் வந்தவுடன் ஆஹா... புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றது நாக்கைச் சுழற்றியபடியே!


அதனைக் கேட்ட புலிக்குக் பயம் வந்ததும், நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது. 


இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது. 


குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார் என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது. 


குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே! என்றது சத்தமாக... 


பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...


இன்றைய செய்திகள் - 17.06.2022


◆அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


◆தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.



◆நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


◆காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: வரும் 23-க்கு ஒத்திவைப்பு.


◆ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம்.


◆இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக 12,000ஐ கடந்து ஒரு நாள் தொற்று பதிவாகியுள்ளது.


◆பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்


◆தகுதி சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கோஸ்டாரிகா அணி தகுதி.


◆ஐசிசி-யின் பிரத்யேக திட்டத்தில் இணையும் ஐபிஎல் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு.


Today's Headlines


🌸The child care centres will be punished severely if they run the home without approval from the Government - Chennai Commissioner warned. 


🌸The 10th and 12th results will be published on 20th of this month - School Education Department. 


🌸For the workers at the ration shop and the for the workers in construction there is a hike of 28% DA. 


🌸The Cauvery Water Tribunal Committee meeting was postponed to 23rd of June. 


🌸To work in all three defensive forces for 4 years the federal government proposed 'Agni Path' scheme which was approved by Central Cabinet Ministry. As per this scheme both male and female youth from 17.5 age to 21 years can join in the armed forces.


🌸For the past 24 hours the recorded Corona count is 12,213. After last February first time the count crossed 12,000.


🌸In para power lifting championship India won 2 bronze medals in the first day. 


🌸In the Qualifying round for the Football World Cup Coast Rica got qualified after pushed down the New Zealand team. 


🌸IPL is going to join in the ICC this may lead to draw back in international cricket matches

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent