இந்த வலைப்பதிவில் தேடு

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - காத்திருக்கும் 4000 ஆசிரியர்கள் - எத்தனை நாட்கள் கலந்தாய்வு நடைபெறும்?

வெள்ளி, 8 ஜூலை, 2022

 


EMIS மூலம் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்

கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 


முதல் நாளான நேற்று 94 முன்னுரிமை எண் வரிசை வரை மட்டுமே மாறுதல் நடைபெற்றது. கலந்தாய்வு நடைபெறும் வேகத்தை பார்த்தால் ஒரு நாளைக்கு 200 ஆசிரியர்கள் மட்டுமே மாறுதல் பெறும் சூழல் உள்ளது. 


4000 ஆசிரியர்கள் மட்டுமின்றி CEO and BEO அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் இருக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் இதே நிலைதான் இருந்தது. அப்படி இருந்தும் EMIS மூலம் வேகமாக கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. 


இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் ஒரு நாளைக்கு 200 பேர் மாறுதல் பெறுவதாக கணக்கிட்டால் கூட இன்னும் 15 முதல் 20 நாட்கள் வரை கலந்தாய்வு நீடிக்கும் என தெரிகிறது. 


கலந்தாய்வு வேகமாக நடைபெற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்கள் வரையிலான முன்னுரிமை கொண்ட ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கலாம் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent