பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு சென்னையில் உள்ள அணைத்து கல்லூரிகளும் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி நேற்று திறக்கப்பட்டது.
இந்நிலையில் கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி Bus day கொண்டாடினர். கல்லூரிக்கு சற்று தொலைவில் நடந்து சென்ற மாணவர்களை அவ்வழியே வந்த காவல் துறையினர் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்லும் படி அனுப்பி வைத்தனர். இதனால் பொதுமக்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து அங்கே வந்த போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்.
மேலும் இனிவரும் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் தங்களது முழுகவனத்தை செலுத்த வேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக