இந்த வலைப்பதிவில் தேடு

தகுதியற்ற விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்!அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

புதன், 20 ஜூலை, 2022

 




''அரசு கல்லுாரிகளில் உரிய தகுதியின்றி குறுக்கு வழியில் சேர்ந்த, கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழக மாணவர்கள், வெளிநாட்டில் படிக்க, பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. 


தற்காலிக நியமனம்


இதன்படி, தமிழகம் -- ஆஸ்திரேலியா உயர் கல்வி நிறுவனங்களில், இரு நாட்டு மாணவர்களும் படிக்கும் வகையில், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.சேலம் பல்கலையில் முதுநிலை வரலாறு தேர்வில், ஜாதி ரீதியான கேள்வி இடம் பெற்றது குறித்து, விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுஉள்ளது.


உயர்கல்வித் துறையை சேர்ந்த இளங்கோ ஹென்றிதாஸ், தனசேகர், விஜயலட்சுமி ஆகிய மூன்று பேர் குழு, ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்.தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களாக பணி அமர்த்தப்படுவோர், 'நெட் அல்லது செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.கடந்த ஆட்சி காலத்தில், குறுக்கு வழிகளில் நியமிக்கப்பட்டவர்களில் பலர், கவுரவ விரிவுரையாளர்களுக்கான தகுதி பெற்றிருக்கவில்லை. அவர்கள் உரிய தகுதி பெறுவதற்கு, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தேர்ச்சி பெற்று விட்டால், பணியில் தொடரலாம்.


விரைவில் அறிவிப்பு


தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களது இடத்தில் வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இது தவிர, அனைத்து வகை அரசு கல்லுாரிகளிலும் உள்ள காலியிடங்களில், ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent