முழு விவரம்:
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
“ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு” என்ற திட்டம் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும். ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு உத்தேச பட்டியல் அளிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலுக்குப் பிறகே கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயரும் மின் கட்டணம் உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மின்சார கட்டணம் எப்படி, எவ்வாறு உயர்த்தப்படவுள்ளது என்பதன் முழு விவரம்:
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வவோர்களுக்கு (42.19 சதவீதம் ) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
அதனத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
2 மாதங்களுக்கு 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.27.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.72.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.297.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.155 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.395 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.565 உயர்த்த பரிசீலனை
தொழில், கடைகளின் மின்கட்டண உயர்வு விபரம்:
- தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
- தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50
- அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00
- தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50
- கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
- மாதம் நிலையான கட்டணம் ரூ.550
வீட்டு உபயோகத்திற்கான முந்தைய கட்டணம் vs புதிய கட்டணம் ஒப்பீடு:
- முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை
- 101 - 200 யூனிட்களுக்கு முன்பு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.
- 201 - 300 யூனிட்களுக்கு முன்பு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 301 - 400 யூனிட்களுக்கு முன்பு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Click Here to Download - EB Bill Increase - Official Press Release - Pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக