பேக்கிங் செய்யப்பட்ட சிப்ஸ், பர்கர், பீஸா என்று முற்றிலும் மண்ணுக்கும் மரபுக்கும் தொடர்பில்லாத உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறது நம் இளைய சமுதாயம்.
பொறித்த, வறுத்த எண்ணெய் உணவுகளுக்கே வேலையில்லாத நம் மரபில் இன்றைக்கு அவைதாம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கும் மக்களுக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு.
தற்போது குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்சினை உடல் பருமன். ‘‘இந்தப் பிரச்சினைக்கு சிறுதானியங்கள் சிறந்த தீர்வாகவே இருக்கும்’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.
இதுகுறித்து டாக்டர் மேலும் கூறியது: “வெள்ளை அரிசியைவிட சிறுதானியங்களில் மாவுச்சத்து 20 சதவீதம் குறைவாக உள்ளது. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி ருசியாக இருக்கிறது என்று சொல்லி குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதே உடல் பருமனுக்கு காரணம்.
அதேநேரத்தில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் உடல் பருமனாகாது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரை நோய், மலச்சிக்கல் வராது. செரிமானம் நன்றாக இருக்கும்.
அரிசியோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நுண்சத்துக்களான கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். செரிமானத்தைத் தாமதப்படுத்தும் என்பதால் உடல் பருமனாகாது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக