இந்த வலைப்பதிவில் தேடு

TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு கட்டாயம்

வியாழன், 7 ஜூலை, 2022

 




ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு வைக்கப்ட்டும் என்னும் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. TET முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வு - இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு



அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்கிறது. 


அந்த வகையில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10, 371 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முழுமையான கால அட்டவணைத் திட்டம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும் டிசம்பரில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   



முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்காக அரசாணை எண் 149 வெளியானது. எனினும் போட்டித் தேர்வுக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தேர்வு நடத்தப்படவில்லை. 


போட்டித் தேர்வு


இந்த நிலையில் வரும் டிசம்பரில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது. 


பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1,874 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கான தேர்வு அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. 


3,987 இடைநிலை ஆசிரியர்கள் தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வானது டிசம்பர் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை


இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பத்து  ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை நியமனப் போட்டித் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். 2013 முதல் காத்திருக்கும் தோழர்களுக்கு, அரசாணை எண் 149ஐ ரத்து செய்து திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் பேட்ரிக் ராய்மண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent