இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர், அரசு ஊழியர்கள் 2022-23 முதல் அரையாண்டுக்கான தொழில் வரி செலுத்த வேண்டும்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

 


தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் சென்னை  மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி துணை விதி 138சி-ன் படியும் 138  டி-ன் படியும் தங்களிடம் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் ஆகஸ்ட் மாதம்  தொழில் வரியினை பிடித்தம் செய்து, செப்டம்பர் மாதம் இறுதிக்குள்  அதற்குண்டான விவரங்களுடன் தாக்கல் செய்து தொழில் வரியினை உரிய   வழிமுறைகளில் செலுத்திட வேண்டும். இல்லையென்றால் சென்னை மாநகர முனிசிபல்  சட்ட விதி 1919, துணை விதி 138-தி ன்படி அபராதம்/ வட்டி தொகை கணக்கீடு  செய்து வசூலிக்கப்படும்.


2022-23ம் நிதியாண்டிற்கு உண்டான முதல் அரையாண்டு தொழில் வரியினை தவறாமல் செலுத்த வேண்டும். ரூ.21,000 வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவை இல்லை. சென்னை மாநகராட்சியின் வலைதளமான  (www.chennaicorporation.gov.in) மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல்  தொழில்வரியினை செலுத்தலாம். மண்டலங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில்  அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் தொழில்வரியினை செலுத்தலாம், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent