ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக இருப்பவர் எழில்பாபு. இவரிடம் கும்பினிப்பேட்டை, இச்சிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அரசின் இலவச மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தாமதம் செய்ததால் அதிகாரிகளிடம் கேட்டபோது உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
இதுபற்றி விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தனர். விசாரணையில் உதவி பொறியாளர் எழில்பாபு, முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை அப்பகுதி விவசாயிகள், மின்வாரிய அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக