ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கரூரில் உள்ளூர் விடுமுறையை, மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.
இந்து பண்டிகையான, ஆடி 18க்கு கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை திடீரென ரத்து செய்ததால், ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதனால், கொங்கு மண்டல மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் ஆடி, 18க்கு, உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கரூரில் உள்ளூர் விடுமுறையை, மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்தது. இருந்தபோதும், ஈட்டு விடுப்பின் கீழ், 86 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை கேட்டு முதன்மை கல்வி அலுவலர் கீதாவுக்கு, கடிதம் அனுப்பி இருந்தனர். அவர், அனுமதி அளித்த நிலையில், அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் திடீரென மாவட்ட நிர்வாகம் விடுமுறையை ரத்து செய்தது. இப்படி முக்கியமான இந்து பண்டிகைக்கு விடுமுறை மறுக்கப்பட்டதால், ஆசிரியர்கள் இடையே கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது.
ஆடிப்பெருக்கை கொண்டாடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்தாண்டும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுமுறை பற்றி எந்த அறிவிப்பும் வராததால், பல பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களின் வேண்டுகோளின் படி, ஈடு செய்யும் விடுப்பாக கடிதம் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கும் விடுமுறை என தகவல் வழங்கப்பட்ட நிலையில், திடீரென இரவு, 9 மணிக்கு மேல் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டதாகவும், அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை விடப்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம், கலெக்டருக்கு ஏன் ஏற்பட்டது என, தெரியவில்லை. ஆசிரியர்கள் என்றால் ஒரு இளக்காரமான மனநிலையில் அணுகும் கலெக்டரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விடுமுறை விடப்பட்டு, அதனை ஈடு செய்ய, வரும் சனிக்கிழமை அல்லது வேறொரு சனிக்கிழமையில் பள்ளிக்கூடம் செயல்பட்டால் என்ன குறைந்து விடப்போகிறது என தெரியவில்லை? ஆசிரியர்கள் தங்களுடைய உரிமை குறித்து எந்தவித போராட்டத்திலும் குரல் எழுப்பாத காரணத்தால், இன்று அடிமைகள் போல நடத்தப்படும் நிலையை ஏற்றுக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். நியாயமான அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட இடம் கொடுக்காத கலெக்டரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக