ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதாருக்கு விண்ணப்பித்தவர், பதிவு சீட்டுடன் மாற்று அடையாள அட்டையை பயன்படுத்தி அரசின் பலன்கள், சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத நபர்கள், அரசின் மற்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க ஆதார் சட்டத்தின் 7வது பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இனி சலுகைகளை பெற கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக