இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் மாநில அளவிலான பொது காலாண்டு தேர்வு நடைபெறுமா?

புதன், 14 செப்டம்பர், 2022

 




தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு முறையில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது


காலாண்டு தேர்வு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. மேலும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இருக்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அத்துடன் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. அத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தேர்வுக்கான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது. மேலும் இந்த திருப்புதல் தேர்வு மாநில அளவில் நடத்தப்பட்டது.


அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் திருப்புதல் தேர்விற்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இதனை தடுக்கும் விதமாக நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது தமிழகத்தில் வழக்கமாக காலாண்டு தேர்வு மாநில அளவில் நடைபெறும். அத்துடன் அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்விற்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.


ஆனால் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) மாநில அளவிலான பொது காலாண்டுத் தேர்வு நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்குரிய கால அட்டவணை மாறுபாட்டுள்ளது. அதன்படி இம்முறை காலாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே மாதிரியாக நடைபெறாது என கூறப்படுகிறது. மேலும் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு முடிந்த பிறகு வழக்கமான விடுமுறை நாட்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent