இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்களின் விடுப்பு குறித்த கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச்சலுகை, விடுப்பை பணமாக்குதல், கல்வி விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது. 


இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியருக்கும் எந்த வகையிலும், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு விடுப்பு வழங்கக்கூடாது என மத்திய அரசு குறிப்பிட்டு உள்ளது. வௌநாட்டு பணியைத்தவிர 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான காலத்திற்கு விடுப்புடனோ அல்லது விடுப்பு இல்லாமலோ பணியில் இல்லாத ஊழியர் பணியில் இருந்து ராஜினாமா செய்ததாக கருதப்படுவார் என கூறப்பட்டு உள்ளது. 


விடுப்பு பயணச்சலுகை அனுமதியளிக்கும் நேரத்தில், ஒரு நடைமுறையாக, விடுப்பு பணமாக்குதலுக்கான அனுமதியும் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்.

மத்திய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு பணிக்காலத்தில் 36 மாதங்களும், மற்றவர்களுக்கு 24 மாதங்களும் அதிகபட்ச கல்வி விடுப்பு வழங்க அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிறு குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக ஒரு பெண் ஊழியருக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. 


குழந்தை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தாலோ அல்லது அரசு ஊழியர் குழந்தையைப் பராமரிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தாலோ, அதற்காக விதிக்கப்பட்டுள்ள பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு விடுப்பு வழங்கலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent