அலுவலக பணி நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த மின்சார பணியாளா்களுக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியா்களுக்கு இதுபோன்ற தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவா் பத்மா ரெட்டி வெளியிட்ட உத்தரவில், ‘தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பணி நேரத்தில் பயன்படுத்துவது தொல்லையாக உள்ளது. கைப்பேசிகளை மணிக்கணக்கில் பயன்படுத்தி பணிநேரத்தை வீணாக்கி வருகிறாா்கள். இது தினசரி பணிகளைப் பாதிக்கிறது.
ஆகையால், உயரதிகாரிகளைத் தவிர கணினி பயன்பாட்டாளா்கள், ஆவண உதவியாளா்கள், தட்டச்சாளா்கள், தற்காலிக பணியாளா்கள் என அனைவரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் பணிநேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மதிய உணவு நேரம், இடைவேளையில் மட்டும் கைப்பேசிகளைப் பயன்படுத்தலாம். இதைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக