இந்த வலைப்பதிவில் தேடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன், 28 செப்டம்பர், 2022

 




மத்திய அரசு ஊழியர்களுக்கு  4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்திய பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.


2022, ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும். 7-ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent