இந்த வலைப்பதிவில் தேடு

"சர்ரு... புர்ரு"..- ன்னு குறட்டை விடும் நபர்களுக்கு இதோ சிம்ப்ள் டிப்ஸ்.! காரணங்களும், தீர்வுகளும்.!

புதன், 19 அக்டோபர், 2022

 



குறட்டை யாருக்கெல்லாம் ஏற்படும், எதனால் குறட்டை வரும், அதற்கு எப்படி எல்லாம் தீர்வு காணலாம்? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.


படுத்தவாறு உறங்கும் பொழுது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பவர்களுக்கு குறட்டை ஏற்படக்கூடும். இவர்கள் குறட்டை விடுவதால் அருகில் உறங்குபவர்களின் தூக்கம் கெடும். 


உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே குறட்டை ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, உடல் எடையை குறைப்பது அவசியம். 


மது அருந்தும் காரணத்தால் தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்படுத்த கூடும். எனவே மது குடிப்பதை தவிர்க்கலாம்.


நேராக படுத்தால் குறட்டை விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ஒருக்கலித்து பக்கவாட்டில் படுப்பது குறட்டை வராமல் தடுக்க உதவும்.


மெலடோனின் அதிகம் இருக்கும் அன்னாசி பழம், வாழைப்பழம், மற்றும் கமலா பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெற முடியும். இதனால், குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம். 


அத்துடன் தலையணைகளை கொண்டு தலையை உயரத்தில் வைத்து தூங்கினால் சீரான சுவாசம் கிடைக்கும் இதன் மூலம் குறட்டையை தடுக்கலாம். 


புகைப்பிடிப்பதால் சுவாச பாதையில் எரிச்சல் உண்டாகி குறட்டை ஏற்பட வழிவகை செய்யும். எனவே புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை அடியோடு தீரும்.


அத்துடன் இஞ்சி டீ குடிப்பது குறட்டை தொல்லையை குறைக்கும். இது தொண்டைக்கு இதமளிக்கும். ஏலக்காய் சுவாச பாதையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி நெஞ்சு சளியை குறைக்கும் இதனால், குறட்டை பிரச்சனை இல்லாமல் போகும்.


இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் குரட்டை பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுபடலாம். இரவில் தூங்குவதற்கு முன் சில யூகலிப்டஸ் இலையின் ஆயிலை முகர்ந்தால் சுவாசப் பாதையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்து குறட்டை சரியாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent