மத்திய அரசு சர்க்கரை நோய்க்கான மலிவு விலை மாத்திரையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சர்க்கரை நோய் குறைபாடு கொண்டவர்களுக்கு 'சிட்டாகிளிப்டின்' 50 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரை 60 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாத்திரை 100 மில்லி கிராம் 10 மாத்திரை 100 ரூபாய்க்கு கிடைக்கும்.
இதேபோல் சிட்டாகிளிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைட் கலந்த 50 மில்லி கிராம் மற்றும் 500 மில்லி கிராம் 10 மாத்திரை 65 ரூபாய்க்கும், 1000 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரை 70 ரூபாய்க்கும் விற்கப்படும்.
சர்க்கரை குறைபாடு உடையோர் தற்போது, 162 முதல் 258 ரூபாய் வரை செலவு செய்து 10 மாத்திரைகள் வாங்குகின்றனர். இந்த மலிவு விலை மாத்திரைகள், பிரதமர் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.
நாடு முழுதும் 8,700 இடங்களில் செயல்படும் இந்த மருந்தகங்களில், மலிவு விலையில் 1,600க்கும் மேற்பட்ட தரமான மருந்துகள், 250 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மருந்தகங்களில், ஒரு சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக