இந்த வலைப்பதிவில் தேடு

சூரிய கிரகணம் - ராசிபலன்கள், பாதிப்புகள், பரிகாரங்கள் - முழு தகவல்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2022

 



அக்டோபர் 25 ஆம் தேதி நிகழவுள்ள சூரிய கிரகணம் சுமார் 4 மணி நேரம் 3 நிமிடங்கள் நீடிக்கும்


சூரிய கிரகணம் எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு?

ஐப்பசி மாதத்தில் சூரியன், சந்திரன் கிரகணங்கள் நிகழ உள்ளன. துலாம் ராசியில் சில நாட்கள் சூரியன், சந்திரன், கேது, சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு பார்ப்பதால் கூடுதலாக தாக்கம் ஏற்படலாம். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். துலாம் ராசியில் நீச்சம் பெற்று பயணிக்கும் சூரியனுடன் கேதுவும், ஆட்சி பெற்ற சுக்கிரனும் பயணம் செய்ய இருக்கின்றன. இதனால் சூரியன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று பயணம் செய்யப்போகிறார். வக்ர நிலையில் பயணித்த சனிபகவான் இந்த வாரத்தில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.


சில ராசிகளில், சுக்கிரன் சூரியன் இணைவு மிகப்பெரிய ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் சூரியனுக்கு பலம் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். ஐப்பசி மாதம் 8ஆம் தேதி அக்டோபர் 25ஆம் தேதி துலாம் ராசியில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதே மாதத்தில் 22ஆம் தேதி நவம்பர் 08ஆம் தேதி மேஷ ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணங்களால் இன்னும் சில மாதங்களுக்கு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. யாருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.


பாதிக்கப்படும் நட்சத்திர பட்டியல்


இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், ஜோதிடத்தின் படி 12 ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் பலன் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.


தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள், அதாவது ஐப்பசி மாதம் 8 ஆம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும். கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும் சாந்தி செய்வது நன்மையாக கருதப்படுகிறது.


மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்ய செய்யலாம். சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ள உள்ள வைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.


அதே போல, அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை யாரும் நீராகாரம் உள்பட எதுவும் அருந்தக்கூடாது. கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் இருக்க வேண்டும்.'


பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி, பொருட்கள், தயிர், பாலில் போடலாம். மதியம் உணவு அருந்தக்கூடாது. ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் பலன் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.


ஜோதிட சாஸ்திரப்படி கிரகணம் என்பது ஒரு அசுப நிகழ்வு. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த நேரத்தில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அப்போது போது கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். எதையும் சாப்பிடுவதும் குடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.


கிரகணமும் மனித உடலும்:

சூரிய கிரகணம் என்பது எப்படி சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் வருவதால் ஏற்படுகின்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனரோ, அதே போல் நம் உடலாக பூமி பார்க்கப்படுகிறது, ஆத்மாவாக சூரியனையும், மனதை இயக்குபவராகச் சந்திரன் பார்க்கப்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


இப்படி உடல், ஆத்மா, மனம் என மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரக் கூடிய நேரம் தான் கிரகண நேரம். அதனால் இந்த கிரகண நேரத்தில் நாம் எதைச் செய்தால் அது பல மடங்கு யோகத்தையும், பலனையும் கொடுக்கக் கூடிய மன நிலையை நம்மில் ஏற்படுத்தும் என்கின்றனர்.


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த சூரிய கிரகணம் சிறப்பாக அமையாது. வெளி நாடுகளுடன் தொடர்புடைய வணிகம் கொண்டவர்கள். இந்த நேரத்தில் அவர்கள் பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு பெரிய முடிவு அல்லது முதலீடு செய்யும் முன், நிறைய யோசிக்க வேண்டும். இவர்களின் செலவுகளும் அதிகரிக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் அல்லது வியாபாரம் செய்பவர்கள் இந்த நேரத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். புதிதாக ஒன்றைத் தொடங்க அதிக அளவு பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டால் கவனமாக இருங்கள். உங்கள் உறவில் சில பிரச்சனைகள் எதிர்பார்க்கப்படுகிறது.


​மிதுனம்


மிதுன ராசிக்காரர்களின் வேலையில் மாற்றம் ஏற்படலாம், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. இந்த பூர்வீகவாசிகளுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். எனவே, தொழில், வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தம்பதியினருக்கு சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.


தனிமையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் காதல் அறிவிப்புக்கு இந்த நேரம் நல்லதல்ல. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கடன் வாங்குவது அல்லது கடன் வாங்குவது பற்றி சிந்திக்க வேண்டாம். தொழில் வல்லுநர்கள் தங்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


​துலாம்


சூரிய கிரகண நேரத்தில் சூரியன் துலாம் ராசியில் இருப்பார். எனவே, இந்த கிரகணம் துலாம் ராசியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பூர்வீகவாசிகளுக்கு சில மதிப்புமிக்க பொருட்களை இழக்க நேரிடும். எனவே இதில் கவனமாக இருங்கள். உங்களின் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் போகலாம். தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த முடியாமல் போகலாம். அன்புக்குரியவர்களுடன் மதப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.


​தனுசு


தனுசு ராசிக்காரர்களும் கிரகணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். இந்த பூர்வீகவாசிகளுக்கு பண விஷயத்தில் பிரச்சனை வரலாம். மிகவும் கவனமாக முதலீடு செய்யுங்கள். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். ராகு அல்லது சூரியன் உங்கள் உடல்நிலையை சீர்குலைப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


பரிகாரம் எப்படி செய்வது?


கெட்ட சக்தியை அழிக்கக் கூடிய துர்க்கை அம்மனுக்கு வெள்ளை மொச்சை வைத்தும், ராகு பகவானுக்கு கருப்பு உளுந்து ஆகியவை வேகவைத்து நைவேத்தியமாக வைத்து தீப, தூபம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும்.


காயத்ரி மந்திரம் சொல்லலாம் - ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!


இல்லை என்றால் ஓம் நமோ நாராயணா , ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.



செய்யக் கூடாத முக்கிய விஷயம்:


கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது. அதே போல் கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் உடலின் எங்கேனும் சொரிந்து கொண்டால் அதே இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அடையாளம் தோன்றும் என நம்பப்படுகிறது.


கிரகண நேரத்தில் கண்டிப்பாக தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. வீட்டை சுத்தம் செய்தலும் கூடாது.


கிரகணத்தின் போது கண்டிப்பாக நாம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான கோளாறு வயிறு சார்ந்து பிரச்சினைகள் ஏற்படும் எனவும் சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent