மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ), பயணப்படி (டிஏ), பதவி உயர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் அடுத்த ஆண்டு விவாதிக்கப்படலாம். ஊழியர்களின் ஊதியத்தில் ரூ 8000 உயர்த்துவது குறித்து அரசாங்கம் நேரடியாக பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு பலப்படுத்த முடியும்.
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 கிடைக்கிறது. அடுத்த ஆண்டு மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படக்கூடும். பிப்ரவரி 1, 2023ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் உயர்வு இருக்கும். ஜனவரி 2023-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுவரையிலான, பணவீக்க புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டும் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. இந்த 3 மாதங்களில் குறியீட்டு எண் வேகமாக வளர்ச்சியடைந்தால், 4 சதவீத அதிகரிப்பு உறுதியாக இருக்கும். குறியீட்டில் இடைவெளி ஏற்பட்டாலோ அல்லது அது குறைந்தாலோ, 3 சதவிகிதம் அதிகரிப்பும் சாத்தியமாகும்.
வரும் புத்தாண்டில் மத்திய ஊழியர்களுக்கு அரசாங்கம் மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும். 2023-ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்தலாம். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தற்போது பஞ்சாப் அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக