பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாநில தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்காமல், காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.
ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாட்டை நீக்க, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக