இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 19.11.2022

சனி, 19 நவம்பர், 2022

 



திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள் : 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.


பொருள்:

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.


பழமொழி :

Lose nothing for want of asking.

கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.

2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். 


பொன்மொழி :

ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்


பொது அறிவு :

1. பெட்ரோல் காரை கண்டுபிடித்தவர் யார் ? 

 கால் பென்ஸ், 1888 . (ஜெர்மனி).


 2. நீராவியைக் கண்டுபிடித்தவர் யார் ?

 நிகோலஸ் குறாட்,1769. (பிரான்ஸ்).


English words & meanings :


al-ta-r - table in a church. Noun. கிறிஸ்தவ கோயிலில் இருக்கும் பிரார்த்தனை மேசை பெயர்ச் சொல். Al-te-r - to change. verb. திருத்தி அமை. வினைச் சொல். both are homonyms 

ஆரோக்ய வாழ்வு :


நாவல் பழங்கள் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் இருக்கும் ஜம்போலினின் மற்றும் ஜம்போசின் என்னும் குளுக்கோசைடு ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாறுவதை பொறுமையாக்குகின்றன. . இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாவல் பழங்கள் மட்டும் அல்லாது அதன் கொட்டையும் அருமருந்தாக பயன்படுகிறது.


NMMS Q

அஷ்டதிக் கஜங்கள் என்று அறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள்__________ அவையை அலங்கரித்தனர். 


 விடை :கிருஷ்ணதேவராயர்


நவம்பர் 19


இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்



இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.


உலகக் கழிவறை நாள்


உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.


நீதிக்கதை


நரியிடம் ஏமாந்த ஓநாய்


நரி ஒன்று தாகத்தால் தவித்தது. தண்ணீர்ரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்து. கிணற்றின் அருகே சென்று கிணற்றின் கயிற்றின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீர்ரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. எப்படி வெளியேறுவது என்று யோசித்தது. மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. 


அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டது. நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள் என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது உள்ளே போனதும் நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது ஓநாயைப் பார்த்தது. நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலே தாவிக்குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய் ஏமாந்து உள்ளேயே இருந்தது. 


நீதி :

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 19.11.2022


* "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, அனைத்து மின் நுகர்வோருக்கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்" என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.


* சென்னை கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் சில மாவட்டங்களில் நவ.21, 22-ல் மிக கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை.


* சிஆர்பிஎஃப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* "சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி-2022” தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரத்தில் நேற்று தொடங்கியது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 238 புத்தாக்க நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும், 104 புதிய கண்டுபிடிப்புகளும் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


* கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா: ஜப்பான் கண்டனம்.


* ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை தகுதி.


* ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: ஜூனியர் பெண்கள் பிஸ்டல் பிரிவில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம்.


* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்குள் நுழைந்தார் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ்.



Today's Headlines


* "Notification on linking Aadhaar number with electricity connection will be issued and an SMS will be sent to all electricity consumers," said Power Minister Senthil Balaji.


* The National Green Tribunal has ordered legal action against those who dump garbage in Chennai's Koovam, Adyar rivers and Buckingham Canal.


 * Weather Forecast: Chance of very heavy rain in some districts of Tamil Nadu on November 21, 22;  Warning to fishermen too.


 * The Madras High Court has directed the Union Home Ministry to take strict action against Central Reserve Police Force officers who engage CRPF soldiers in domestic work and follow orderly system.


* The "International Innovation and Innovation Expo-2022" started yesterday in the city of Marco in South Goa. 238 innovative companies from home and abroad participated in it and 104 new innovations were displayed for the public to see.


 * North Korea tests intercontinental ballistic missile: Japan condemns


 * Asia Cup Table Tennis: Indian player qualifies for semi-finals for first time


* Asian Airgun Championship: Gold medal for Indian team in junior women's pistol category.


 * Men's Tennis Championship: American Taylor Britts enters semi-finals.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent