இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 29.11.2022

செவ்வாய், 29 நவம்பர், 2022

 


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: மக்கட்பேறு


குறள் : 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்


பொருள்:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்

பழமொழி :

Labour conquers everything.

உழைப்பு அனைத்தையும் வெல்லும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.


 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின்


பொது அறிவு :

1. கண்ணீர் சுரப்பிக்குப் பெயர் என்ன ?

 லாச்ரிமல் கிளாண்ட்ஸ். 


2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்? 

கெப்ளர்.


English words & meanings :

blew - wind moving and creating air current. verb. ஊதுதல். வினைச் சொல். blue - a color. noun. நீல நிறம். பெயர்ச் சொல். both homonyms


ஆரோக்ய வாழ்வு :



அஞ்சீர் என்றும் குறிப்பிடப்படும் அத்திப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நீண்ட நேரம் உங்களை நிறைவாக உணர உதவும். இது 'ஃபிசின்' என்ற நொதியைக் கொண்டுள்ளது, இது உணவை சிறந்த மற்றும் விரைவான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது தொப்பை கொழுப்பை இழக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதில் தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


NMMS Q

9, 28, 65, ____, 217. 


விடை : 126. 


விளக்கம் : 2 x 2 x 2 =8 + 1 =9; 3 x 3 x 3 = 27 + 1= 28; 4 x 4 x 4 = 64 + 1 = 65; 5 x 5 x 5 = 125 + 1 = 126; 6 x 6 x 6 = 216 + 1 = 217


நீதிக்கதை


பிடிவாதம் கொண்ட சிறுமி


ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். 


ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். 


அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள். 


கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள். 


கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள். 


அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார். 


அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள். 


ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால். 


கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா. 


நீதி :

வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.


இன்றைய செய்திகள் - 29.11.2022


*  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


* சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மஸ்கட், குவைத், புனே விமானங்கள் பெங்களூரு, ஹைராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.


* அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.


* 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


* லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்.


* அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது.


* ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்.


* இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


* உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.


Today's Headlines


* 'Rainbow Forum' Scheme for Government School Students: Launched by Chief Minister Stalin in Trichy.


 *  Due to heavy fog in Chennai, Muscat, Kuwait and Pune flights were diverted to Bangalore and Hyrabad.


*  Time Table Released for Govt School Teachers Transfer Consultation: The consultation starts from tomorrow.


*  Union Road Transport Minister Nitin Gadkari has also said that vehicles of central and state governments which are in use for more than 15 years will be destroyed from April 2023.


*  Avoid antibiotics for mild fever: ICMR guidance for clinicians.


 * NASA has released the echoes of light rays from a black hole in the universe in the form of sound.


*  FIFA Football: Fury over Morocco win;  Riots in Belgium.


 * Thanga Mangai P.D. is the first woman president of the Indian Olympic Association.  Usha is elected unopposed.


*  World Cup Football: The match between Spain and Germany ended in a draw.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent