மிக மிக அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மிக அருகே வரவுள்ளதை அடுத்து அதை மக்கள் விரைவில் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்தன. இந்த அரிதான வால் நட்சத்திரத்துக்கு, 'சி/2022 ஈ3 (இஸட்.டி.எப்.,) என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' பெயரிட்டுள்ளது.
இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் இம்மாத இறுதி மற்றும் பிப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் பூமிக்கு மிக அருகே தென்படும் என கூறப்படுகிறது. அப்போது அதை பகல் நேரங்களில், 'பைனாக்குலர்' வாயிலாகவும், இரவில் வெறும் கண்களுடனும் காண வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியை நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின், இப்போது தான் பூமியை நெருங்கி வருகிறது.
'இந்த வால் நட்சத்திரம், சூரியனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது. அது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. அதனால் தான் பூமியை சுற்றி வர நீண்ட பயணத்தை அது மேற்கொள்கிறது' என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக