அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 5ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகள் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடந்தன.
உயர் நிலைப்பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடந்தன. இதையடுத்து, அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் 2023 ஜனவரி 5ம் தேதி தொடங்கும் என்றும், பிற வகுப்புகளான 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் 2023, ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறையில் இருந்த மேற்கண்ட உயர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இன்று வகுப்புகள் வழங்கம்போல தொடங்குகின்றன. 1 முதல் 5ம் வகுப்புகள் வரை 5ம் தேதி தொடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக