1.அதிகப்படியான யோசனை.
எல்லாத்துக்கும் யோசனை. ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி.
ஒன்று நடந்தால் ஏன் இப்படி நடக்கவில்லை என்று கேள்வி.
அப்படி நடந்தால் ஏன் இது இப்படி நடக்கவில்லை என்று அதிருப்தி.
2. தாமதமான தூக்கம்.
எதையாவது வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அதை கொன்று தன்னுடன் வைத்துக்கொண்டு தூக்கத்தை தள்ளி வைப்பது.
இல்லை, எனக்கு சீக்கிரம் தூக்கம் வராது என்ற தனக்கு தானே கொள்கை. வராது என்பதனை வர வை. அதானே உன் வேலை.
3.கடந்த காலத்தை பிடித்து வைத்திருத்தல்.
இறந்த காலம் இறந்துவிட்டது. எதிர்காலம் பிறக்கவேயில்லை.
நிகழ்காலம் தான் உண்மை. இப்போது இருப்பது தான் நிஜம்.
மற்றதெல்லாம் நிழல். உருண்டு பிரண்டாலும் கடந்த காலங்கள் உருப்பெற்று வராது. அழிந்துவிட்டது.
4.விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.
அவர் எனக்காக தான் அதை சொன்னார்.
அவள் என்னைத்தான் பேசுகிறாள்.
இப்படி அத்தனையும் உங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.
முதுகுக்கு பின் பேசுபவர்களால் உங்களை துன்புறுத்த முடியாது.
ஏனெனில் அவர்கள் அங்கு மட்டும்தான் பேசுவார்கள்.
5. எல்லா நேரத்திலும் புகார்.
அனைத்துக்கும் கோபம் கொள்வது.
சிறு ஏமாற்றத்தை கூட தாங்காமல் அவரால் அவளால் அவர்களால் தான் என்று குற்றம் சொல்வது.
தன் மீதான பிழையை மறந்து அருகில் இருப்பவரிடம் பழியை சுமத்துவது.
6.அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கிறேன்.
கடவுளால் கூட அனைவரையும் மகிழ்விக்க முடியாது.
ஒருவராவது உங்களை எதிர்த்தால் தான் குறை கூறினால் தான் வளரமுடியும். எவரையும் உங்களால் திருப்தி படுத்த முடியவே முடியாது.
இந்த ஆறுகாரணங்களால் தான் மன அழுத்தம் உண்டாகிறது.
இதனை தடுக்க வழிகள் இல்லவே இல்லையா?
இருக்கிறது.
வெளியிலிருந்து உங்களை யாராலும் அழுத்தத்தை தர முடியாது.
அப்படி தந்தால் அனுமதிக்காதீர்கள்.
உங்களை கேட்டு தான் எதுவும் உள் வரவேண்டும்.
வெளியில் செல்ல வேண்டும்.
நீங்கள் எஜமானர்களாக இருங்கள்.
மனங்களை ஆளுங்கள்.
மனிதர்களை அல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக