துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து உலக நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவில் நிவாரணப் பணிகளை செய்துவருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த சின்னமணியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.காவியதர்ஷினி மற்றும் அவரது சகோதரர் ஆர்.ஹம்ரிஷ் ஆகிய இருவரும் தாங்கள் சேமிப்புத் தொகை மற்றும் தங்களது உறவினர்கள் மூலம் கிடைத்த தொகை என ரூ.10,050-ஐ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்தனர்.
இதனால், பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் உசேன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றனர். அங்கு அந்தத் தொகையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் நேற்று அளித்தனர். தொகையைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மாணவர்களைப் பாராட்டினார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக