இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 2 மொழித்தாள் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து

திங்கள், 13 மார்ச், 2023

 


பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், மொழித்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



3 ஆயிரத்து 225 தேர்வு மையங்களில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தனித் தேர்வர்களுடன் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில் 180 தேர்வு மையங்களில், மொத்தம் 45 ஆயிரத்து 982 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதேபோல் புதுச்சேரியிலும் 40 மையங்களில் தேர்வு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவ- மாணவிகளிடம், நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, பதிலளித்து பேசிய ,மாணவர்கள் முதல் நாளான இன்று நடைபெற்ற மொழித்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து தேர்வு குறித்து பேசிய அவர்கள், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும், தேர்வு அரை கண்காணிப்பாளர்கள் முறையாக நடந்து கொண்டார்கள் என்வும் கூறினர்.


மேலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்திருந்ததாகவும் தெரிவித்த மாணவர்கள், புத்தகத்தின் உள்ளே புக் இன் வினாக்கள் வந்தாலும், சாய்ஸ் அடிப்படையில் புக் பேக் கேள்விகளும் இருந்ததால் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக சந்தோசமாக கூறிவிட்டு சென்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent