ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததில் மாணவி சுபிஸ்னாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வகுப்பறையில் இருந்து மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் வெளியேற்றினர். மாணவி சுபிஸ்னாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். இதனிடையே இதுபற்றி அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடபொன்பரப்பி போலீசார் வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக