மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. 7 ஆவது ஊதியக் குழுவின் நிர்வாகிகளும் மத்திய நிதியமைச்சக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது 4 % அகவிலைப்படி உயர்வு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக