இந்த வலைப்பதிவில் தேடு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க கோரிக்கை!!!

ஞாயிறு, 26 மார்ச், 2023

 




மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% விழுக்காடு அகவிலைப்படி உயர்வை பின்பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% விழுக்காடு  அகவிலைப்படி உயர்வை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு 38% விழுக்காட்டில் இருந்து 42% விழுக்காடாக  வழங்க ஒப்புதல் அளித்துள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம் எனக் கூறியதோடு மத்திய அரசை பின்பற்றி  தமிழ்நாடு அரசும் அதே ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


ஏற்கனவே மூன்று முறை 6 மாதங்கள் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டதை போன்று வழங்காமல் ஜனவரி மாதம் முன் தேதியிட்டு  வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent