நீரிழிவுக்காரர்களுக்கு அரோக்கியம் சாத்தியமா? இந்தக் கேள்வியைச் சமீபத்தில் எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீரிழிவு நோய் ஆயுளைக் குறைத்துவிடும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் ராமசாமி 100 வயதைக் கடந்தவர். கடந்த 25 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்தும் ஆரோக்கியமாக வாழ்பவர். இது எப்படிச் சாத்தியமானது?
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை உண்பது, சர்க்கரைச் சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும். மேலும் பரிசோதனைகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதும் அவசியம்.
மருத்துவர்களின் அறிவுரைகளைக் கடைபிடிக்காதவர்களும் அதிகக் கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்குப் போதிய உழைப்பை அளிக்காதவர்களும் நீரிழிவு நோயை முற்றவைக்கிறார்கள். நீரிழிவுப் பிரச்சினை அதிகரிக்கும்போது கண்கள், சிறுநீரகங்கள், கால்கள், இதயமும்கூடப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாமல் முற்றவிடுபவர்கள் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இம்மாதிரியான சூழலில் அதை கட்டுக்குள் கொண்டுவர இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளலாம். இப்போது வலியில்லாமல் இன்சுலின் ஊசிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. வலியில்லாத அந்த ஊசிகள் இன்சுலின் பம்ப் (Insulin pump) என அழைக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக