இந்த வலைப்பதிவில் தேடு

குரு பெயர்ச்சி 2023 ​ - அனைத்து ராசிகளுக்கான பலன்கள் - அதிர்ஷ்டம் யார் பக்கம்?

புதன், 24 மே, 2023

 




ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு பகவான் மீன ராசியிலிருந்து, செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்கு செல்கிறார். இவர் மேஷத்தில் மே 1, 2024 வரை மேஷத்தில் சஞ்சரிப்பார். மேஷ ராசியில் அக்டோபர் மாதம் வரை ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். குரு ராகு சேர்க்கை, குரு அதிசார, வக்ர பெயர்ச்சிகளால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

​குரு பெயர்ச்சி எப்போது? அதிசார, வக்ர பெயர்ச்சி காலம் இதோ :

குரு பகவான் ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 5.14 மணிக்கு மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். இவர் 2023 செப்டம்பர் 4ம் தேதி மேஷ ராசியிலேயே அதிசார பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். 2023 டிசம்பர் 31ம் தேதி மீண்டும் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதி பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.


மே 1ம் தேதி மேஷத்திலிருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் விழுவதால் சிம்மம், துலாம், தனுசு ராசிக்கு கூடுதல் சுப பலன்கள் கிடைக்கும். இந்த பதிவில் 12 ராசிகளுக்கு குரு பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


மேஷம்

குரு பகவான் ஜென்ம குருவாக உங்களுக்கு அமர உள்ளார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அதை சுப விரயமாக மாற்றிக் கொள்ளவும். குருவின் அமைப்பால் புதிய வீடு, மனை என சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. புதிய இடத்திற்கு வேலை மாறலாம். உங்கள் வேலை தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.


​​​மேஷம் குரு பெயர்ச்சி பலன் 2023 -கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு


ரிஷபம்

ரிஷப ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நடப்பதால், நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்கள் வரவை உணர்ந்து செலவு செய்யவும். எந்த ஒரு முதலீடு செய்யும் முன்னும், வீடு, மனை என சொத்து வாங்கும் போதும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படவும்.


தற்போது இருக்கும் வேலையில் முன்னேறப் பார்க்கவும். வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடாதீர்கள். கூட்டுத் தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை. கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

வழிபாடு : நரசிம்மர் வழிபாடு செய்து வர மன நிம்மதி, கல்யாணம் கூடிவரும்.


ரிஷபம் குரு பெயர்ச்சி பலன் 2023 : விரய குருவும் சிறப்பான பலன் தருவார்!


மிதுனம்

மிதுன ராசிக்கு ஓரளவு சிறப்பானதாக இருக்கும். உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். சிந்தனை சிறக்கும். செயல் பெருகும். இழந்த செல்வங்களை மீட்க வாய்ப்புகள் உண்டு. விலகி போன உறவுகள் உங்களைப் புரிந்து கொண்டு வருவார்கள். கஷ்டங்கள் விலகும். உங்களின் அணுகுமுறையால் பணம் தேடி வரும். பிரச்னைகள் குறையும்.


மிதுனம் குரு பெயர்ச்சி 2023 : லாப குரு தரும் ஓஹோன்னு பலன்


கடகம்

கடக ராசிக்கு 10ல் குரு வருவதால், இந்த அமைப்பு பெரியளவில் சாதகமாக இருக்காது. 10ல் குரு பதவியைப் பறிப்பார் என்பார்கள், அவரோடு ராகுவும் சேர்வதால் உங்கள் வேலை, தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை.


பங்கு சந்தை உள்ளிட்ட விஷயங்களிலும், சூதாட்டம் உள்ளிட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கவும். புதிய விஷயங்களைத் தொடங்க வேண்டாம். இருக்கும் வேலையிலேயே தொடர்வது நல்லது.


கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் : 10ல் குரு பதவி பறிபோகலாம்... கவனம்!


சிம்மம்

சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்கிறார். அவரின் 5ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மேலும் விசேஷமானது. உங்கள் செயல்களில் மேன்மை உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதால் நீங்கள் உத்தியோகம், தொழில் என எது செய்தாலும் அதில் நல்ல லாபம் உண்டு. வருமானம் பெருகும் என்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மூத்தவர்களின் ஆதரவு, ஆலோசனைகள் கிடைக்கும்.


சிம்ம ராசிக்கு கோடீஸ்வர யோகம், திருமண பாக்கியம் உறுதி - குரு பெயர்ச்சி பலன்கள்​


கன்னி

கன்னி ராசிக்கு சாதக பலன்கள் அதிகம் கிடைக்கும். சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு செயல்பட்டால் உங்களின் செயல்களில் நல்ல மேன்மையும், வெற்றியும் உண்டாகும். கடந்த காலத்தில் இழந்த மதிப்பு, மரியாதை, பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது.


உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களில் குருவின் பார்வை விழுவதால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். வெளியூரில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.


துலாம்

துலாம் ராசிக்கு குருவின் 7ம் பார்வை கிடைப்பதால், பலவிதத்தில் நன்ம்மிஅகள் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும்.


கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். நல்ல லாபம் ஈட்டுவீர்கள். நிதி நிலை வளர்ச்சியால் உங்கள் கடன் பிரச்னைகள் தீரும். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை கிடைக்கும். உழைப்புக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 6ல் குரு அமர்வதும், அங்கு ராகுவின் சேர்க்கை இருப்பதால் பிரச்னைகள் தீர்ந்து நல்ல யோகம் உண்டாகப் போகின்றது. உங்கள் பெயர் புகழ் உயரும். சுப கடன்கள் உண்டாக வாய்ப்புள்ளது.


தொழில், வியாபாரத்தில் நீங்கள் எடுத்து முயற்சிகளும், முதலீடுகளிலும் நல்ல லாபம் உண்டாகும். உங்கள் நோய் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குருவால் தன லாபம் உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.


தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் அற்புத பலன்கள் தருவதாக இருக்கும். உங்கள் ராசிநாதன் குருவே ராசிக்கு 5ல் அமர்வதும், அவரின் பாரவை உங்கள் ராசி மீது விழுவதும் மிகவும் சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. பலவிதத்தில் உங்களுக்கு நன்மைகள் கிடக்கப்போகிறது.


உங்கள் குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கப்போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு சிறப்பாக கிடைக்கும்.


திருமணத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைவதும், குழந்தை பாக்கியம் கிடைப்பது என நன்மைகள் உண்டாகும். அனைத்து வகையிலும் நன்மைகள் குரு வாரி வழங்குவார்.


மகரம்

குருவின் அருளால் மகர ராசியினருக்கு கஷ்டம் குறையப் போகின்றது. ஏழரை சனி நடக்கும் காலத்தில் குருவின் அருள் சற்று ஆறுதல் தருவதாக இருக்கும். குருவுடன் இணைந்த ராகுவால் உங்களுக்கு எதிலும் முன்னேற்றம் தருவதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வேலை தேடுபவருக்கு நல்ல வேலை அமையும். தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.


கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கின்ற நிலையில் குரு ராசிக்கு 3ல் ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. எதிலும் சாதகமற்ற நிலை இருக்கும். குறிப்பாக உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். திருமண, குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்புகள் உண்டு.


உத்தியோகம், தொழில், வியாபாரம் சாதாரண நிலையிலேயே இருக்கும். முதலீடுகளைத் தவிர்க்கவும். மன நிம்மதியும், அனுகூலமான பலன் பெற இறை வழிபாடு ஒன்றே உதவும்.


​மீனம்

மீன ராசிக்கு 2ம் வீடான குடும்பம், தன ஸ்தானத்தில் குரு பகவான் வருவதால் பண வரவு அதிகரிக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10 ஆகிய இடங்களில் விழுவதால் உங்களுக்கு ஏழரை சனி காலமாக இருந்தாலும், குருவின் அருளால் நன்மைகள் பல நடக்கும். பிரிந்த உறவுகள், நண்பர்கள் சேர்வார்கள்.


சூழலை சரியாக உணராமல் எந்த ஒரு வாக்குறுதிகளையும் கொடுப்பதைத் தவிர்க்கவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வுக்கு சாத்தியமுண்டு. சில திடீர் யோகம், அதிர்ஷ்டம் உங்களுக்கு கைக் கொடுக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent