இந்த வலைப்பதிவில் தேடு

சிறுநீரக செயலிழப்பை முன்கூட்டியே காட்டும் 5 அறிகுறிகள் - தவிர்த்துவிட வேண்டாம்

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

 




கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. சிறுநீரக நோய் ஆபத்தானது.


அதிக பிரச்சனைக்கு முக்கிய கராண் என்னவென்றால் இந்த நோய் தாமதமாக கண்டறியப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சிறிய சிறுநீரக பிரச்சனை கூட சிறுநீரகத்தின் முழுமையான சேதத்திற்கு காரணமாகிறது. அதேநேரத்தில் உடலில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதன் அறிகுறிகள் முன்கூட்டியே வெளிப்படத் தொடங்கும். அதனை சரியாக கவனித்தால் குணப்படுத்திவிட முடியும் என கூறும் மருத்துவர்கள், சிறுநீரக செயலிழப்பையும் அவ்வாறே குணப்படுத்தலாம் என கூறியுள்ளனர்.


இது குறித்து பேசிய டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) சிறுநீரகவியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் சஞ்சய் குமார் அகர்வால், சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பு தொடங்குவது நோயாளிக்கு தெரியாது. சிறுநீரக நோய் 3வது நிலையை எட்டும் வரை சுமார் 70-80 சதவிகிதம் பேருக்கு சிறுநீரகப் பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரிவதில்லை என கூறியுள்ளார். இதனால் கடுமையான சிறுநீரக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 10-20 சதவிகிதம் பேர் அறிகுறிகளைக் கண்டாலும், அலட்சியம் காரணமாக, அவர்கள் அவற்றைப் புறக்கணிப்பதாகவும், இதனால் நோய் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



சிறுநீரக செயலிழப்புக்கு காரணம்


இந்தியாவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான பெரும்பாலான நிகழ்வுகள் நீண்டகால சிறுநீரக நோயால் ஏற்படுகின்றன. அறிகுறிகள் தென்பட்டும் கவனக்குறைவாக இருப்பது முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது. மறுபுறம், கோவிட்க்குப் பிறகு, பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


சிறுநீரக செயலிழப்புக்கான 5 முக்கிய அறிகுறிகள்


* கை, கால்களில் திடீரென வீக்கம் - ஒருவருக்கு திடீரென கை, கால் அல்லது சிறுநீரகப் பகுதி வீக்கம் ஏற்பட்டால், உடனடியாக சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.


* சிறுநீர் கழிப்பதில் சிரமம் - ஒருவருக்கு சிறுநீரில் ரத்தம் இருந்தால், சிறுநீரில் சீழ் வந்தால், சிறுநீர் ஓட்டத்தில் பிரச்னை, சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


* ஒருவருக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படும். அத்தகைய நபர் வழக்கமான சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



* ஒருவரது குடும்பத்தில் சிறுநீரக நோயின் வரலாறு இருந்தால் அல்லது 60 வயதுக்கு மேல் இருந்தால், சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.


* சிறுநீரகம் தொடர்பான அறிகுறிகள், சிறுநீரகப் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அவர் உடனடியாக சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


வழக்கமான சோதனையும் பாதுகாப்பதற்கான எளிதான வழி


சிறுநீரக நோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு முறை KFT செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை குறைக்கிறது. நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனையின்பேரில் இந்த சோதனையை செய்து கொள்ள வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent