இந்த வலைப்பதிவில் தேடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல்

திங்கள், 10 ஏப்ரல், 2023

 





தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 131 நாட்கள் கிடப்பில் போட்டு மீண்டும் திருப்பி அனுப்பிய நிலையில் தற்போது ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.


ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை பொறுத்த வரையில் அவசர சட்டமாக கொண்டு வந்து மற்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் அது தொடர்பாக விளக்கங்கள் கேட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக 24 மணி நேரத்திற்குள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 131 நாட்கள் கிடப்பில் போட்டு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது பெரும் சர்ச்சையான நிலையில், ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.



இந்த சரத்துக்கள் அனைத்தும் உடனடியாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் தடை மாசோதாவை எந்த வித சரத்துக்களும் மாற்றாமல் கசட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த மசோதாக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது, ஆளுநர் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறப்பு அம்சம் என்ன? - ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தியே இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விளையாட்டை நேரில் விளையாடும்போது, அனைத்துச் சூழல்களும் விளையாடுபவருக்குத் தெரியும். ஆனால், ஆன்லைனில் யாரையும் எளிதாக ஏமாற்றி, பணத்தைச் சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி, பணத்தைத் தொலைத்து, நிம்மதியிழந்து இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent