இந்த வலைப்பதிவில் தேடு

தந்தை இறந்த அன்றும் தேர்வு எழுதிய மாணவி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 479 மதிப்பெண் பெற்று அசத்தல்..!!

செவ்வாய், 9 மே, 2023

 




கடலூரில் தந்தை இறந்த அன்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் திரிபாதரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கிரிஜாவின் தந்தை ஞானவேல் பொம்மை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தேர்வு அன்று அதிகாலையில் கிரிஜாவின் தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் காலமானார். தந்தை இறந்த அன்றும் கல்வியின் முக்கியத்துவத்தை கருதி மாணவி கிரிஜா பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார்.


சோகமே உருவாய் தேர்வு எழுதிய அவருக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கிரிஜா 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தந்தை இறந்த அன்று எழுதிய வேதியியல் பாடத்தில் மட்டும் 100க்கு 81 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாணவி கிரிஜாவுக்கு குடும்பத்தினரும், சக மாணவர்களும், கிராமமக்களும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent