அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானதைவிட அதிகமாக உள்ள, உபரி ஆசிரியர்கள், வரும், 17ம் தேதி இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், வரும், 17ம் தேதி கட்டாய இடமாறுதல் செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் விகிதப்படி, தேவையான ஆசிரியர்களை விட பாடவாரியாக அதிகமாக உள்ளவர்கள், தேவையான பள்ளிகளுக்கு மாற்றப்படுவர் என, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக