இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா?

வெள்ளி, 19 மே, 2023

 




தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அக்னி நட்சத்திரம் வெயில் மே 28ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் தற்போது உச்சகட்ட வெயில் அடித்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ஜூன் முதல் வாரம் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1 ஆம், தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு வாரம் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent