இந்த வலைப்பதிவில் தேடு

துணை மருத்துவ படிப்புகளுக்கு NEET தேவை இல்லை - அதிகாரிகள் தகவல்

திங்கள், 1 மே, 2023

 




நீட் தரவரிசையில் இடம் பெறவில்லை என்றால் கவலை வேண்டாம். துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவை இல்லை ‘கட்ஆப்’ மதிப்பெண் மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். 


இந்நிலையில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொதுத்தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்னரே அறிவிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.  கட் ஆப் மட்டுமே போதும்: இந்திய மருத்துவமும் ஒரு மருத்துவருக்கு இணையான பாடப்பிரிவுகள்தான்.


இந்த படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து நாம் முறையாக பதிவு செய்து மக்களுக்கு சேவை செய்யலாம். இதன் மூலம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளும் காக்கப்படும். கொரோனா காலத்தில் நம்மை பாதுகாத்தது இயற்கை மருத்துவம் தான். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்) என்பது ஐந்தரை ஆண்டுகள் படிக்கக் கூடிய படிப்புகளாகும். நான்கரை ஆண்டுகள் தியரியாக படிக்க வேண்டும். 


ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சியை ஏதேனும் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நாம் மருத்துவம் பார்க்கலாம். இந்த நான்கரை ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இணையாக இருக்கும் அடிப்படை அறிவியல் அனைத்தும் கற்பிக்கப்படும்.


அனடோமி, பிசியாலஜி, பயோகெமிஸ்டிரி, பத்தாலஜி, சோசியல் மற்றும் பிரிவென்டிவ் மருத்துவம், பாரன்சிக் மெடிசின், எமர்ஜென்சி மெடிசின், மைனர் சர்ஜரி, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், அடிப்படை பார்மக்காலஜி ஆகியவை கற்பிக்கப்படும். 


இவற்றுடன் இயற்கை மருத்துவம், யோகா உள்ளிட்டவையும் கற்று கொடுக்கப்படும். தமிழகத்தில் 13 முதல் 15 தனியார் நடத்தும் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரி என்றால் அது சென்னை அரும்பாக்கத்தில் அண்ணா அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது.


இந்த கல்லூரிகளில் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன், எம்.டி எனப்படும் முதுகலை பட்டப்படிப்பையும் நாம் படிக்கலாம். இதுகுறித்து கல்வியாளர் ராஜ ராஜன் கூறுகையில், அதிக பணம் செலுத்த முடியாத மாணவர்கள் மெரிட்டில் இடம் கிடைத்தால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். 


அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் தங்களுக்கான இடத்தினை பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு நடுவில் உள்ள மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்காமல் போகிறது. கட்ஆப் மட்டுமே வைத்து படிக்கக்கூடிய பல மருத்துவ படிப்புகள் இங்கு உள்ளன.


பாரா மெடிக்கல் பொறுத்தவரை டிப்ளமோ படிப்பு என என அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். இது ஒரு டிகிரி படிப்பு. இதற்கு உயர் படிப்பும் உள்ளது. பிசியோதெரபி , ஆக்குபேஷனல் தெரபி, கார்டியாலஜி, அனஸ்தீசியா , பி.எஸ்.சி. நர்சிங் போன்ற அனைத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் ஆகும். குறிப்பாக ஸ்பீச் தெரபி ஒரு நல்ல படிப்பு. 


இதற்கு நல்ல எதிர்காலமும் உண்டு. ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு அது தெரிவதில்லை. நீட் தேர்வு பொறுத்தவரை அனைவருமே பாஸ் ஆக கூடியவர்கள் தான். மெரிட் தான் கிடைக்காமல் போகிறது. எனவே நாம் தேர்ச்சி பெறவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கிக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent