இந்த வலைப்பதிவில் தேடு

ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு

வெள்ளி, 9 ஜூன், 2023

 

2023ம் ஆண்டுக்கான கோடை விடுமுறைக்கு பின் வரும் வார இறுதி நாட்கள் மற்றும் ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதலாக மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.


தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியமான மாவட்டத்தில் இருந்து சென்னைக்கும் மற்றும் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 3 நாட்கள் 1500 பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.


இன்று மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் கூடுதலாக மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். தினசரி இயக்கப்படும் பேரூந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகள் இயக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.


கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூருக்கு கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும். போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும். மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent