இன்றைய காலகட்டத்தில் எந்த நோயையும் அடியோடு ஒழித்துக் கட்ட முடியுமா என்பது அனைவர் மனதிலும் எழும் ஒரு முக்கிய கேள்வி.
அதே நேரத்தில், இரத்த சர்க்கரையை அடியோடு நீக்குவது தொடர்பான கேள்விகள் நீரிழிவு நோயாளிகளின் மனதில் எழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆம் சர்க்கரையை வேரிலிருந்தே கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள். வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளையும் வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றுவதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நாவல் பழம்
நாவல் பழம் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் அடங்கியது. அதே நேரத்தில்,நீரிழிவுநோயாளிகளுக்கு நாவல் பழ விதைகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். அதன் விதைகளை எந்த வகையிலும் பயன்படுத்தலாம். இதன் விதையை பொடி செய்து கஷாயம் தயாரித்து அருந்தினால் பலனும் கிடைக்கும். மறுபுறம், நீங்கள் விரும்பினால், நாவல் பழ விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அந்த தண்ணீரை உட்கொள்ளுங்கள். இதன் மூலம் இரத்த சர்க்கரையுடன் கூட உங்கள் எடையை எளிதில் குறைக்கலாம்.
அத்தி இலைகளின் நன்மைகள்
நீரிழிவு நோய்க்கு அத்தி இலைகளிலிருந்தும் பயன் பெறலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அத்தி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். இது தவிர, இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெந்தயம்
வெந்தயமும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.வெந்தயத்தால்கிடைக்கும் பலன்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நீரிழிவை அடியோடு குணமாகக்க வெந்தயத்தை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். எனினும் தீவிர நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை உட்கொள்ளக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக