இந்த வலைப்பதிவில் தேடு

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் முளை கட்டிய வெந்தயம்!

சனி, 11 நவம்பர், 2023

 



நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஆரோக்கியமே நமது வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பதோடு, வாழ்வில் சுவையூட்டுகிறது.


முளைகட்டிய தானியங்கள் நம் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் எண்ணிலடங்காதவை.


முளைகட்டும்போது தானியங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகரிக்கிறது. தானியங்களில் உள்ள வைட்டமின் ஏ அளவு இரட்டிப்பாகிறது. அதில் உள்ள புரதங்கள் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டவை.


முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் பெரிதாகவும் நினைக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச்செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் பாசிப்பயறு, கொண்டைக் கடலை, முளை கட்டிய வெந்தயம் என அனைத்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.


நீரிழிவும் முளை கட்டிய தானியங்களும்


இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய் என்பது பொதுவாக பலரிடம் காணப்படுகிறது. நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால், சிறுநீரகம் , கண்கள், இதயம் என முக்கிய உறுப்புகள் மிகவும் பாதிக்கப்படும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முளை கட்டிய தானியங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதிலும் முளைகட்டிய வெந்தயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் அண்டாது. முளை கட்டிய வெந்தயம் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம். முளைகட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்பட்ட நீரிழிவு நோய் குணமாகும். மேலும், வெந்தயம் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் குளுக்கோஸை மெதுவாக செயல்பட செய்யும்.


நீரிழிவுக்கு சிறந்த மருந்தாக செயல்படுவதுடன் கீழே குறிப்பிட்டுள்ள பல உடல் நல பிரச்சனைகளையும் முளை கட்டிய தானியங்கள் தீர்க்கின்றன.


இதய ஆரோக்கியம்


ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், முளை கட்டிய தானியங்களில் காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தமனிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்கிறது.


கண்பார்வை


முளை கட்டிய தானியத்தில், வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் புரத சத்து உள்ளதால், உங்கள்கண்பார்வையைகூர்மையாக்க உதவுகிறது. முளை கட்டிய தானியத்தில் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இது உங்கள் கண்களின் செல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.


உடல் பருமன்


முளை கட்டிய தானியங்களை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவுகிறது. முளை கட்டிய தானியங்களில் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக எடை கட்டுக்குள் இருக்கும்.


இரத்த சோகை


முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதுடன், இரும்பு சத்தும் அதிகரிக்கிறது. இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்பதோடு, உறுப்புகள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் சென்றடவதை எளிதாக்குகிறது.


முளை கட்டிய தானியங்களை சாப்பிடும் முறை


முளை கட்டிய தானியங்கள் ஊட்டச்சத்தின் ஆதாரமாக கருதப்படும். ஆனால், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம், தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால், அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வைட்டமின் 'சி' சத்து அதிகமாகச் சேர்ந்திருக்கும். பொதுவாக, காலை நேரம் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent