இந்த வலைப்பதிவில் தேடு

இடப்பற்றாகுறையால் மாணவர் சேர்க்கையை குறைத்த அரசு பள்ளி

வியாழன், 22 ஜூன், 2023

 


மாணவர்கள் சேர ஆர்வம் காட்டினாலும் போதிய இட வசதி இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அரசுப் பள்ளி குறைத்துக் கொண்டுள்ளது.


கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூரில் 1960-ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. தனியார் பள்ளிகள் வருகை, தனியார் பள்ளி மீதான மோகம் உள்ளிட்ட காரணங்களால் பள்ளியில் 2002-ம் ஆண்டில் 5 பேர் மட்டுமே இருந்தனர். 



இதையடுத்து, பள்ளியை மூட கல்வித் துறை அலுவலர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற விஜயலலிதா, பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ- மாணவிகளைத் தேடிப் பிடித்து பள்ளியில் சேர்த்தார். இதனால், அந்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.


மேலும், பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்ததுடன், டைல்ஸ், மின் விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கணினி ஆய்வகம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தினர். இதன் விளைவாக பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. 


தனியார் பள்ளிகளில் பயின்றவர்களும் இந்தப் பள்ளியைத் தேடி வந்து சேர்ந்தனர். தொடர்ந்து, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. அப்போதும், இட வசதி போதாமல், தேடி வந்த பலருக்கும் பள்ளியில் இடம் வழங்கமுடியவில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent