இந்த வலைப்பதிவில் தேடு

கழுத்து வலிக்கான காரணங்கள் மற்றும் நிவாரணங்கள்

செவ்வாய், 13 ஜூன், 2023

 




இன்றைய நவீன யுகத்தில் பலரது வாழ்க்கை முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது. நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்ககூடிய வேலை, அதை விட கணினி முன்பாக மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்கிற வேலை தான் இன்றைக்கு பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது.


இதனால் பல இளைஞர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகிறது. டெஸ்க் ஜாப் என்று தேடித் தேடி தேர்ந்தெடுப்பதினால் உண்டாகும் சோம்பேறித்தனத்தினால் ஏராளமான உடல் நல ஆபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை இறுதியில் தான் தெரிந்து கொள்ளப்படுகிறது.


இவற்றில் முதன்மையானதும், பெரும்பாலான மக்களால் அவதிக்குள்ளாகும் பிரச்சனை என்றால் அது கழுத்து வலி தான். கழுத்து வலி தானே என்று நாம் சாதரணமாக எடுத்து கொள்வது உடல் நலனில் பெரும் பிரச்சனையை உருவாக்கிடும்.


நாம் உட்காரும் பொசிசன் மற்றும் கணினி வைத்திருக்கும் பொசிஷன் இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி.


கழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்துமுதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.


சில நேரங்களில் கழுத்து வலி தோல்பட்டை வலியாகவும் அடையாளப்படுத்தப்படும். இவற்றில் இடது பக்கம் மட்டும் நீண்ட நாட்கள் கழுத்து வலி இருந்தால் என்ன காரணம்.


பொதுவான காரணங்கள்


இடது பக்க கழுத்து வலிக்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது உள்ளுருப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கும்.


குறிப்பாக இதயம்,ரத்த நாளங்கள், கணையம் மற்றும் பித்தப்பையில் உண்டாகிற ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கூட இடது பக்கம் கழுத்து வலி ஏற்படும்.


இதைத் தவிர ஏதேனும் நரம்புக் கோளாறு இருந்தாலோ அல்லது முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்பட்டிருந்தால் கூட இடது பக்க கழுத்தில் வலி ஏற்படக்கூடும்.


அதை விட உங்களது அன்றாட வழக்கம் எப்படியிருக்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.


நீண்ட நேரம் கணினி முன்பாக உட்கார்ந்திருப்பது, அதிக நேரம் குனிந்து படித்துக் கொண்டேயிருப்பது, தூங்கும் போது ஒரே நிலையில் நாள் முழுவதும் ஈடுப்பட்டிருப்பதால் வயிற்றை அழுத்தி படுத்திருப்பது கூட இந்த பிரச்சனையை உண்டாக்கிடும்.


கழுத்து தசைகளுக்கு அதிக டென்ஷன் ஏற்படும் போது அதீத கழுத்து வலி ஏற்படும். தவறான பொசிசனில் நீண்ட நேரம் தூங்கும் போது உங்களையும் அறியாமல் வலி ஏற்பட்டிடும்.


நீண்ட நேரம் ஒரே பொசிசனில் இருப்பதால் கழுத்து தசை டெம்ப்பராக ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் தசை சோர்வடையும்.


ஏதேனும் காயத்தினால் அதுவும் உள் காயம் ஏற்பட்டிருந்தால் கூட கழுத்து வலி ஏற்படக்கூடும்.குறிப்பாக விப்லாஷ் எனப்படக்கூடிய நிதானமில்லாத திடீர் அதிர்வினால் கூட கூட கழுத்து வலி ஏற்படலாம். சில நேரங்களில் தோல்பட்டை வலி, மயக்கம் ஏற்பட்டால் கூட இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.


செர்விக்கல் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை ஏற்பட்டால் கூட கழுத்து வலி ஏற்படும். அதீத எடை தூக்கினால் கூட கழுத்தில் வலி ஏற்படும். சில நேரங்களில் கழுத்தில் வலியைத் தாண்டி முன் அறிகுறியாக சில வித்யாச உணர்வுகள் கூட ஏற்படுவதுண்டு.


போன் ஸ்புருஸ் என்ற பிரச்சனை ஏற்ப்பட்டிருந்தால் கழுத்தின் அசைவுகள் குறைந்திடும். சாதரணமாக கழுத்தின் அசைவுகளுக்கு கழுத்தில் இருக்கும் தசை நார்கள் எளிதாக அசையும் வண்ணம் இருக்க வேண்டும்.


Fibromyalgia என்ற ஒரு வகை நோய் பாதிப்பினால் கூட உங்களுக்கு இடது பக்க கழுத்து வலிக்கலாம். இந்த நோய் தாக்கினால் அது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய திசுக்களை எல்லாம் அழித்திடும், இதனால் நம்முடைய உடல் அசைவுகள் வெகுவாக குறைந்திடும்.


இது பாதிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் சருமம் விறைப்பாக மாறிடும். பெரும்பாலும் இது கழுத்துப் பகுதிகளில் தான் அதிகமாக ஏற்படுகிறது.


வீக்கத்துடன் கூடிய வலி அல்லது கழுத்தை திருப்பி பார்ப்பதில், குனிந்து நிமிர்வதில் சிக்கல் அல்லது வலி ஏற்படுவது இதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.


*வேறு_சில_காரணங்கள்*


மேற்ச்சொன்ன இந்த நோயைத் தவிர இடது பக்க கழுத்து வலிக்கு இன்ன பிற காரணங்களும் சொல்லப்படுகிறது.


புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் தாக்குகிற புற்றுநோயின் முதல் அறிகுறி கழுத்து வலியாகத் தான் இருக்கும். ஆனால் தைராய்டு சுரப்பி புற்றுநோய் மிகவும் அபூர்வமாகத்தான் தாக்குகிறது.


இதைத் தவிர, கட்டி, முதுகுத்தண்டில் ஏற்படுகிற கட்டி ஆகியவற்றிற்கு கூட இடது பக்க கழுத்து வலி எடுக்கும்.


வீட்டு கை வைத்தியம்


*முடக்கத்தான்_கீரை_*

*சூப்*


*தேவையானவை*


வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு,


நசுக்கிய பூண்டு 2 பற்கள்


சின்ன வெங்காயம், தக்காளி 1


மிளகுத்தூள்,சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்


உப்பு தேவையான அளவு


வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.


*செய்முறை*


கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.


*பலன்கள்*

வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப். வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால், கழுத்து பிடரி வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


கழுத்து வலி, பிடரிவலி குணமாக…


தேவையானவைகள்


வில்வ இலையை அரைத்து விழுது ஆரஞ்சிப்பழ அளவு எள்ளெண்ணை ( நல்லெண்ணெய்) அரை லிட்டர்


செய்முறை


வில்வ இலைகளை சுத்தமானதாகத் தேர்ந்தெடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து நைய அரைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் ஓரு பாத்திரத்தில் நல்லெண்ணையை விட்டு தில் வில்வஇலை விழுதைப்போட்டு

எண்ணையுடன் நன்றாக உறவாகும்படி கலந்து கொள்ளவும் பாத்திரத்தை அடுப்பேற்றி மிதமான தீயாக எரித்து இலை நீர் சுண்டிய பிறகு பக்குவமான பதத்தில் இறக்கி வடிகட்டிக் கொண்டு புட்டியில் அடைத்து கொள்ளவும்  


 உபயோகம்


விடியற்காலையில் சுமார் 5 -6 மணிக்கு இந்த எண்ணையில் தேவையான அளவு எடுத்து தலைக்குத் தேய்த்துக் கொண்டு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளிக்கவும் தலையைத் துவட்டியவுடன் ரசத்துடன் சாதம் சாப்பிடவும் இவ்வாறு வாரம் இரு முறை குளிக்கவும் 5,  6,  முறை குளித்தால் போதும்… தலை வலி கழுத்து வலி இசிவு பிடரிவலி தீரும்.


.

 கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு,வலி 


 தேவையான  பொருட்கள்: 


ஆமணக்கு எண்ணெய்.


புளிய இலை.


 செய்முறை


ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.


.

 மருந்து _ 2


 தேவையான பொருள்கள் 


எலுமிச்சைச்சாறு.


தேன்.


 செய்முறை


சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.


.

 மருந்து _ 3


 தேவையானவைகள்


இரண்டு லிட்டர் பசும்பாலை நான்கில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சவும். பிறகு அதில்


வெல்லம் – 200 கிராம்


நல்லெண்ணெய் – 100 மி.லி


உளுந்துப் பொடி – 200 கிராம்


பூண்டு – 20 கிராம்


ஆகியவற்றைச் சேர்த்து களிபோல் கிளறவும். இதுதான் உளுத்தங்களி. இதில் எலுமிச்சம் பழம் அளவுக்குச் சாப்பிட்டு மல்லாந்து படுத்தால்,கழுத்துவலி, இடுப்பில் ஏற்படும் பிடிப்பு, கடுப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.


 இதற்கு மேலும் பாதிக்கப்பட்ட இடுப்பு, கழுத்து தண்டுவட எலும்பு தேய்மான பிரச்சினைகள் உள்ள பகுதிகளில்…… 


செம்மண் புற்று மண்ணை பக்குவப்படுத்தி எடுத்து வந்து தினசரி ஒன்று அல்லது இரண்டு வேளை தண்ணீருடனோ அல்லது இஞ்சி சாற்றுடனோ கலந்து பசை போல ஆக்கி பற்று போட்டு வர விரைவில் குணம் தெரியும்.


 நொச்சி இலைகளை எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.


இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பாலும்  நீரும்  சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி, பிடரி வலி காணாமல் போகும்.


கழுத்து மற்று பிடரி வலியை போக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். கை  கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும்.


 தலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். மெதுவாக இந்த பயிற்சியை செய்ய வேண்டும் 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து மற்றும் பிடரி வலி பறந்து விடும்.


 இதற்கு மேலும் பாதிக்கப்பட்ட இடுப்பு, கழுத்து தண்டுவட எலும்பு தேய்மான பிரச்சினைகள் உள்ள பகுதிகளில்…… 


செம்மண் புற்று மண்ணை பக்குவப்படுத்தி எடுத்து வந்து தினசரி ஒன்று அல்லது இரண்டு வேளை தண்ணீருடனோ அல்லது இஞ்சி சாற்றுடனோ கலந்து பசை போல ஆக்கி பற்று போட்டு வர விரைவில் குணம் தெரியும்.


வேறு எந்த மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் மேலே கூறிய மருந்துகளையும் சேர்த்து சாப்பிட்டு வரவும் நோயின் பாதிப்புகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.


படுத்துக்கொண்டே டி.வி. பார்க்கக்கூடாது. கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்யக்கூடாது. வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்துவலியினை அதிகப்படுத்தும்.


உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். பித்த உணவுகளையும் எண்ணெய் வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும் மன அழுத்தத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.


உடல் எடை அதிகமாக இருந்தால் கூட கழுத்து வலி ஏற்படும். அதனால் உடல் எடையை குறைதிடுங்கள். அதே போல அதிக எடையுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.


சரியான தூக்கம் மற்றும் முறையான உணவுப்பழக்கம் இருந்தால் இதனை மிகவும் எளிதாக குறைத்திடலாம்.


பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து 


எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது.


கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.


 வேறு எந்த மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் மேலே கூறிய மருந்துகளையும் சேர்த்து சாப்பிட்டு வரவும் நோயின் பாதிப்புகளில் இருந்து விரைவில் விடுபடலாம்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent