ராமநாதபுரம் அருகே பள்ளியின் தலைமை ஆசிரியர் தாக்கியதில் 12ம் வகுப்பு மாணவர் காயமடைந்ததாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் சரவணன் என்ற மாணவர் முடி வெட்டவில்லை என பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவரின் தலையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டதாகவும், அப்போது சுவற்றில் மோதி மாணவர் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவர் தெரிவிக்கையில்; தான் முடிவெட்டவில்லை என தலைமை ஆசிரியர் தன்னை அடித்தார், அப்போது தன் தலை அங்கிருக்கும் சுவற்றில் பட்டு காயம் ஏற்பட்டது என கூறினார். மேலும் மாணவரின் தாயார் கூறுகையில்;
மாணவர் பள்ளிக்கு தாமதமாக வருவது , ஒழுக்கமின்மை போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூற வேண்டும் எனவும் மாணவரை அடிக்க உரிமை இல்லை என தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர் மாணவர் தனது தாயாருடன் வீட்டுக்கு சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக